உடனடியாக இதனை செய்யுங்கள்! நேரில் சென்று மைத்திரியை எச்சரித்த சம்பந்தன் -
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் சென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது. இதன்போதே சம்பந்தன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
நேற்று மாலை நடந்த இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய பிரதமர் நியமனம் மற்றும் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
"புதிய பிரதமர் நியமனம், நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ஆகியவை சட்டத்துக்கு முரணானவை. இவை ஜனநாயகத்துக்கு விரோதமானவை. இவற்றை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்" என்று இரா. சம்பந்தன், ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.
அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாகக் கூட்டுமாறும் சம்பந்தன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
தான் அரசமைப்புக்கு உட்பட்டே அனைத்தையும் செய்தார் என ஜனாதிபதி இதன்போது சம்பந்தனிடம் கூறியுள்ளார்.
உடனடியாக இதனை செய்யுங்கள்! நேரில் சென்று மைத்திரியை எச்சரித்த சம்பந்தன் -
Reviewed by Author
on
November 06, 2018
Rating:

No comments:
Post a Comment