அடுத்த ஆண்டில் அகதிகள் தொடர்பில் ஜேர்மனி எடுக்க இருக்கும் முக்கிய முடிவு -
ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer வெள்ளிக்கிழமையன்று இந்த தகவலை வெளியிட்டார்.
2015ஆம் ஆண்டு அகதிகள் பிரச்சினையின்போது பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தனர்.
சிரியாவில் யுத்தம் நடப்பதால், சிரிய அகதிகளை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதற்கு தடை ஒன்று அமுலில் உள்ளது.
ஆனால் அந்த தடை இந்த ஆண்டு இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே அந்த தடையை நீட்டிப்பதா இல்லையா என்பதை ஜேர்மனி இனிதான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த நேரத்தில் சிரியாவில் எத்தகைய சூழல் நிலவுகிறது என்பதைக் குறித்து வெளியுறவுத்துறை என்ன அறிக்கை அளிக்கிறதோ அந்த அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும்.
இந்நிலையில், அகதிகள் பல குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது ஜேர்மன் மக்களிடையே கடுமையான கசப்புணர்வை ஏற்படுத்தி வருவதால், பல ஜேர்மன் மாகாண உள்துறை அமைச்சர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடும் அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
பாதுகாப்புச் சூழல் அனுமதிக்கும் பட்சத்தில், சமுதாயத்திற்கு அபாயமானவர்கள் என்று கருதப்படும் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் அகதிகளை சிரியாவுக்கு திரும்ப அனுப்பலாம் என்று Saxony மாகாண உள்துறை அமைச்சர் Roland Wöller தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதையடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Freiburgஇல் சமீபத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் சிரியர்கள் உட்பட்ட ஒரு கூட்டம் ஆண்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு உருவானது நினைவிலிருக்கலாம்.
அடுத்த ஆண்டில் அகதிகள் தொடர்பில் ஜேர்மனி எடுக்க இருக்கும் முக்கிய முடிவு -
Reviewed by Author
on
November 19, 2018
Rating:

No comments:
Post a Comment