இனி தலைநிமிர்ந்தால் அது தமிழீழத்தில்தான் முடியும்! மாவீரர் நாள் உரையில் கௌதமன் -
தமிழீழ தேசிய மாவீரர்கள் தினம் வட, கிழக்கு தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் தமிர்கள் வாழக்கூடிய தேசங்கள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் கௌதமன் தலைமையிலும் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு வீர மரணமடைந்த மாவீரர்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள், மூன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழீழ மக்கள் துள்ளித் துடிக்க, ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றையும்தாண்டி நாங்கள் அமைதி காக்கின்றோம், எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமென்று நம்புகின்றோம், அவ்வாறு ஒரு தீர்வு கிடைக்காத நிலையில், குட்ட குட்ட குனிந்த இனம் தலை நிமிர்ந்தால் அது இனி தமிழீழத்தில்தான் போய் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனி தலைநிமிர்ந்தால் அது தமிழீழத்தில்தான் முடியும்! மாவீரர் நாள் உரையில் கௌதமன் -
Reviewed by Author
on
November 28, 2018
Rating:

No comments:
Post a Comment