சிறுநீரக பிரச்சனை: இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -
மனிதர்களின் உடலுறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கிய உறுப்பாகும். தற்போது மாறி வரும் உணவு பழக்க முறையால் எல்லா வயதினருக்குமே சிறுநீரக நோய்கள் வருகிறது.
சில முக்கிய முக்கிய அறிகுறிகளை வைத்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என பார்ப்போம்.

உடல் சோர்வு
சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது, எரித்ரோஃபோய்டின் எனும் ஹார்மோன் குறைவாக சுரக்கும். அதனால் போதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாமல் உடல் விரைவில் சோர்வு நிலை உண்டாகும்.
சிறுநீர் கழிதல்
சிறுநீர் அளவுகதிமாக கழிந்தால் அதுவும் இரவு நேரத்தில் அதிகளவு வெளியேறினால் சிறுநீர் பாதித்திருப்பதாக அர்த்தம்தூக்கமின்மை
சிறுநீரக பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறாது. இதனால் இரவில் சரியான தூக்கம் வராது.
சிறுநிரீல் ரத்தம்
சிறுநீருடன் இரத்தம் கலந்து வந்தால் சிறுநீரகத்தில் கோளாறு உள்ளதாக அர்த்தம். உடனே மருத்துவர்களை பார்பது நலம்முதுகு வலி
முதுகின் கீழ் பகுதியில் கடுமையான வலி இருந்தால் சிறுநீரகத்தில் கல் அல்லது வேறு பிரச்சனை இருக்க அதிக வாய்ப்புள்ளது.
உடல் அரிப்பு
சிறுநீரகங்கள இரத்தத்தில் கனிமங்கள் மற்றும் சத்துக்களை சமநிலையில் வைக்க முடியாத போது உடல் அரிப்பு கடுமையாக இருக்கும். தொடர் அரிப்பு இருந்தால் கூட சிறுநீரக கோளாறின் அறிகுறி தான்அடிக்கடி ஜலதோஷம்
ஒருவர் நல்ல சூடான சூழல் உள்ள இடத்தில் இருந்தால் கூட அவருக்கு அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால் சிறுநீரகத்தில் ஏதோ கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அர்த்தமாகும்.
சிறுநீரில் நுரை
சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். அதனால் சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும்.
சிறுநீரக பிரச்சனை: இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -
Reviewed by Author
on
November 11, 2018
Rating:

No comments:
Post a Comment