மன்னாரில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்புத்தினத்தை முன்னிட்டு மர நடுகை...படங்கள்
சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்புத்தினத்தை முன்னிட்டு மன்னார் மாதர் அபிவிருத்தி அமைப்பின் ஆதரவில் மன்னாரில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக மன்னார் மாவட்ட மாதர் சங்க ஒன்றிய மாவட்ட இணைப்பாளர் திருமதி மகாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியாக கார்த்திகை 10 ந் திகதி தொடக்கம் மார்கழி 29 ந் திகதி
வரை இவ் தினம் அனுஷடிக்கப்பட்டு வருகின்றன. டோமினிக்கன் குடியரசில்
அரசியலில் ஈடுபட்ட மூன்று பெண்களை படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதை நினைவு கூறுமுகமாகவே இது இடம்பெறுவதாகவும்
அனைத்து வன்முறைகளும் இல்லாது ஒழிக்கும் ஒரு பிரச்சார நடவடிக்கையாக இது நடைபெறுகிறது. இவ்வாறு மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறு பெண்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.
இதில் ஒன்றாக எமது நாட்டில் ஏற்படுகின்ற அழிவுகளை நினைவு கூர்ந்தும்
அத்துடன் எதிர்காலத்தில் எமது சந்ததினரை பாதுகாக்கும் நோக்குடன் அதாவது எமது சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு தொணிப்பொருளில் மரங்கள் நட்டு வைபவங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
மன்னார் மாட்டத்திலுள்ள கிராம மட்டங்களில் இயங்கி வருகின்ற பெண்கள்
அமைப்புக்கள் அதாவது மாதர் சங்கங்கள் இந்த நிகழ்வுகளில் பங்குபற்றி
வருகின்றனர்.
தற்பொழுது இவ் மர நடுகையானது எழுத்தூர் சந்தியிலிருந்து தரவன்கோட்டை வரை வீதியோரத்திலும் அத்துடன் இப்பகுதியிலுள்ள குளக்கட்டைச் சுற்றி நூறு மரக்கன்றுகளை இன்று (28.11.2018) நடுகின்றோம். என மன்னார் மாவட்ட மாதர் சங்க ஒன்றிய மாவட்ட இணைப்பாளர் திருமதி மகாலட்சுமி குருசாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னாரில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்புத்தினத்தை முன்னிட்டு மர நடுகை...படங்கள்
Reviewed by Author
on
November 29, 2018
Rating:
No comments:
Post a Comment