வெறும் 20 ஆயிரம் ரூபா செலவு! இலங்கை இளைஞன் கண்டுபிடித்த புதிய வாகனம் -
பொல்கஹவெல பராக்கிரமபாகு பாடசாலையை சேர்ந்த எஸ்.ஏ.இஷார கசுன் என்ற உயர்தர பரீட்சை எழுதும் மாணவனே இந்த மோட்டார் வாகனத்தை தயாரித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் என்ஜின் ஒன்றை பயன்படுத்தி அவர் இந்த வாகனத்தை தயாரித்துள்ளார்.
இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை காலில் மிதித்து செலுத்த முடியும். இந்த வாகனத்தில் க்லெட்ச், பிரேக் மற்றும் என்ஸ்லேட்டர் கொண்டு இயக்க கூடிய வகையில் கியர் ஒன்றும் இந்த இளைஞனினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 3 பேர் பயணிக்க முடியும். இந்த வாகனத்தை தயாரிப்பதற்கு குறித்த இளைஞன் 20000 ரூபா பணத்தை செலவிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த வாகனத்தை மேலும் விரிவுபடுத்தி ஊனமுற்றோர் பயணிக்க கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித செலவுகளுமின்றி இந்த வாகனத்தை ஓட்டமுடியும் என்பதே இதன் சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.
வெறும் 20 ஆயிரம் ரூபா செலவு! இலங்கை இளைஞன் கண்டுபிடித்த புதிய வாகனம் -
Reviewed by Author
on
January 24, 2019
Rating:

No comments:
Post a Comment