கொழும்பில் பரபரப்பான பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் -
கொட்டாஞ்சேனையை சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தளையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மற்றைய நபர் மதி என்ற பெயரால் அழைப்படுபவர் என உயிரிழந்த மற்றைய இளைஞனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இளைஞர்களுக்கு இடையிலான வர்த்தக முரண்பாடு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் பரபரப்பான பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் -
Reviewed by Author
on
January 14, 2019
Rating:

No comments:
Post a Comment