சீமான் - கயல்விழி தம்பதி இணைய காரணமான ஈழ உணர்வு -
அப்பாவாகிய சந்தோஷத்தில் இருக்கும் சீமான் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தனது சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார்.
சீமானுக்கும், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
செப்டம்பர் 8-ந்தேதி உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

ஈழ உணர்வால் ஒன்றிணைந்த தருணம்
சிறு வயது முதலே கயல்விழியின் தந்தைக்கு ஈழக் காதல்ம இருந்துள்ளது. இதனால் தந்தையை பார்த்து மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது.ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தியுள்ளார். இந்த போராட்டங்கள் கயல்விழியை கவர்ந்துள்ளது.
தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை சீமானிடம் கூறிய கயல்விழி, ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி சீமானுக்கு பிடித்து இருந்தது.
அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன், ஐயா பழநெடுமாறன் மற்றும் நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சீமானை வற்புறுத்தி வந்தனர்.
ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்த சீமானை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது.
இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும், சீமானும் சந்திதுள்ளார்கள்.
இதையடுத்து சீமானின் பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்துகொண்டார்கள்.
ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது.
சீமான் - கயல்விழி தம்பதி இணைய காரணமான ஈழ உணர்வு -
Reviewed by Author
on
January 13, 2019
Rating:
No comments:
Post a Comment