வவுனியாவில் நடந்த சோகம்-தண்ணீர் எடுக்கச் சென்ற மாணவி சடலமாக மீட்பு -
வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தாலிக்குளம் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றில் பாடசாலை உடைகளை தோய்ப்பதற்காக தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில் தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக 15 வயதுடைய சொக்கலிங்ககுமார் லோபிகா என்ற பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவியின் பெற்றோர் பிள்ளையினை காணவில்லை என தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலத்தினை மீட்டெடுத்த பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் நடந்த சோகம்-தண்ணீர் எடுக்கச் சென்ற மாணவி சடலமாக மீட்பு -
Reviewed by Author
on
January 14, 2019
Rating:

No comments:
Post a Comment