10 லட்சம் கொடுத்தாலும் இதை தரமாட்டேன்: வைரமுத்து
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ள கண்ணே கலைமானே இன்று திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அவர் கவிஞர் வைரமுத்துவிடம் ஒரு பாடலுக்காக பேசிய சம்பவம் வெளியாகியுள்ளது.
அமீரா என்கிற படத்திற்காக ஒரு பாடலை எழுதி வைத்திருந்தாராம் வைரமுத்து. ஒரு திருடனின் வாழ்க்கையை ஓர் அழகான பெண் எப்படி மாற்றுகிறார் என்பது பற்றியது தான் இந்த பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து.
அந்த நேரத்தில் தொலைபேசியில் வந்த இயக்குநர் சீனுராமசாமியிடம் அந்த பாடலை படித்துக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு ஆஹா என்ற சீனுராமசாமி, இது என் கதைக்குத்தான் பொருந்தும். என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று குழந்தைபோல் அடம்பிடித்தாராம்.
இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு என்றாராம் வைரமுத்து. இந்த பாட்டுக்கு மட்டும் 10 லட்சம் வாங்கித் தருகிறேன் கொடுங்கள் என்றாராம் சீனுராமசாமி. 10 ரூபாய் கொடுத்தாலும் சீமானுக்குத்தான் இந்தப் பாட்டு என்றாராம் கவிஞர் சிரித்துக்கொண்டே.
10 லட்சம் கொடுத்தாலும் இதை தரமாட்டேன்: வைரமுத்து
Reviewed by Author
on
February 23, 2019
Rating:

No comments:
Post a Comment