தீராத ஒற்றை தலைவலியால் அவதியா?
இது தலையின் ஒரு பகுதி மட்டுமே கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து வலிக்கும் போது அது ஒற்றை தலைவலியாக உணரபடுகிறது.
பொதுவாக இது சிலருக்கு வேலைப்பளு காரணமாக ஒற்றைத்தலைவலி அடிக்கடி வருவதுண்டு.
இதற்காக நாம் வைத்தியரை கூட அணுகாமல் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி உபயோகிப்பதுண்டு. இதிலிருந்து மீண்டு வர நாட்டு மருத்துவமே கை கொடுக்கும்.
அந்த வகையில் நீங்கள் வீட்டிலேயே செய்து பயன்பெறக்கூடிய சில நாட்டு மருத்துவ குறிப்புகள் இங்கு பார்ப்போம்.

- எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
- நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.
- முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
- அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
- 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.இது நல்ல நிவாரணம் தரக்கூடியதாகும்.
- அடிக்கடி ஒற்றை தலைவலியினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கரட் சாப்பிடுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்
- ஆப்பிளில் ஒற்றைத் தலைவலியை போக்கக் கூடிய மக்நீசியம் அதிகம் உள்ளது. ஆப்பிளை உண்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
- நீர்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காயை உண்பதினால் நீரிழப்பினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
- வெற்றிலை சாறை எடுத்து தலையில் பற்று போடுவதன் மூலம் தற்காலிகமாக ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
- கிரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனே விடுபடலாம்.
தீராத ஒற்றை தலைவலியால் அவதியா?
Reviewed by Author
on
February 23, 2019
Rating:
No comments:
Post a Comment