விஜய் நடிக்காமல் விட்ட படம்! ஆனால் 175 நாட்கள் ஓடி சாதனை
விஜய் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரின் படங்களுக்கு இன்று பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் கலெக்ஷன். அதுவும் ரூ 100 கோடிகளுக்கு மேல் தான்.
அதே வேளையில் அவர் தவற விட்ட சில முக்கிய படங்களும் உண்டு. அதில் ஒன்று இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப். இதே ஃபிப்ரவரி 19 ல் 2004 ம் வருடம் படம் வெளியானது.
கடும் போட்டிகளுக்கு நடுவே நல்ல தியேட்டர்கள் கிடைக்காமல் கிடைத்த இடங்களில் மட்டுமே வெளியிட வேண்டிய சூழலில் படம் வெளியானது..
அதுவும் சேரன் ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையில் படத்தை துணிச்சலாக வெளியிட்டார். நம்பிக்கைக்கு ஏற்றவாரு ரசிகர்களும் படத்தை கொண்டாட 175 நாட்களுக்கு மேல் நிறுத்தவே முடியாமல் ஓடி பெரும் சாதனை படைத்தது.
இப்படத்தில் விஜய் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்க முடியாமல் போக பின் சேரனே நடித்தார். படத்தின் வெற்றியை பார்த்து விஜய்யே சேரனை கூப்பிட்டு வாழ்த்தினாராம்.
தற்போது ஆட்டோகிராஃப் படம் 15ம் ஆண்டு கொண்டாட்டத்தை எட்டியுள்ளது. இதை அவர் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய் நடிக்காமல் விட்ட படம்! ஆனால் 175 நாட்கள் ஓடி சாதனை
Reviewed by Author
on
February 20, 2019
Rating:

No comments:
Post a Comment