70 உயிர்களை காவுவாங்கிய தீ விபத்து: சந்தேக வலையத்தில் 12 பேர் -
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சவுக்பஜார் பகுதியில் அமைந்துள்ள ஹாஜி வாஹத் என்ற 4 அடுக்கு குடியிருப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த குடியிருப்பில் 3-வது மற்றும் 4-வது மாடியில் உள்ள பல வீடுகளை வணிகர்கள் வேதிப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை இரவு சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ உண்டானது.
அதைத் தொடர்ந்து அந்த தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும், பிளாஸ்டிக் பொருட்கள், வேதிப்பொருட்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கிற்கும் பரவியது.
இதில் பிளாஸ்டிக் பொருட்கள், வேதிப்பொருட்கள் இருந்த வீட்டில் தீ பரவியவுடன் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதில் அந்தக் குடியருப்பில் வசித்து வந்த மக்கள் தீயில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வங்க தேசம் முழுவதும் இந்த தீ விபத்து பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் இந்தத் தீ விபத்து தொடர்பாக 10 முதல் 12 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் டாக்கா துணை காவல் ஆணையர் இம்ராஹிம் கான் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் இறந்தவர்களின் உடலை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
70 உயிர்களை காவுவாங்கிய தீ விபத்து: சந்தேக வலையத்தில் 12 பேர் -
Reviewed by Author
on
February 23, 2019
Rating:
Reviewed by Author
on
February 23, 2019
Rating:


No comments:
Post a Comment