அண்மைய செய்திகள்

recent
-

கண்டன அறிக்கைகளை விடுவதை விடுத்து நீதியை நிலை நாட்ட ஒத்துழைப்பு வழங்குங்கள்-மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் கோரிக்கை

ஒவ்வொருவரும் கடந்த ஞயிற்று கிழமை இடம் பெற்ற பயங்கர தீவிரவாத தாக்குதல் குறித்து கவலை அடைந்துள்ளோம் என்பது உண்மைதான்
இதுவரை எமது நாடு எமது மக்கள் சந்தித்த மிக பெரிய தாக்குதல் 30 வருட யுத்தம் தந்த வலிகளில் இருந்து மீண்ட எம் இனத்திற்கு இவ் தாக்குதல் பேர் இடியாகவே அமைந்திருக்கின்றது. இந்த கொலைவெறி தாக்குதலின் ரணங்களில் இருந்து எமது மக்கள் எப்படி மீளபோகின்றார்கள் என்று தெரியவில்லை .

ஆனாலும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பது மட்டும் அல்ல எமது நிலைப்பாடு மீண்டு ஒருமுறை இவ்வாறன துர்பாக்கிய நிலை எமது மக்கள் எவ் இனத்தவர்களாக இருந்தாலும் ஏற்படக்கூடது என்பதே எமது நிலைப்பாடு

என மன்னார் நகர சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் பொது அமைப்புகள் என எல்லாம் ஆளுக்கு ஆள் கண்டன அறிக்கைகளை முதலில் யார் விடுவது எனவும் ஹர்தால் யார் தலைமையில் அணுஸ்டிப்பது எனவும் ஒருவரை ஒருவருர் குற்றம் சுமத்தி தப்பித்து கொள்வதிலுமே கவனம் செலுத்துகிறார்களே தவிர பாதிக்கபட்ட மக்கள் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குறைவுபட்டே காணப்படுகின்றனர்.

எது எவ்வாறோ இழந்த உயிர்களுக்கும் அப்பாவி சிறு குழந்தைகளுக்கும் நீதியை நிலை நாட்டுவதன் மூலமே நாம் பதில் சொல்ல முடியும்

எனவே நீதியை நிலை நாட்டி உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை தண்டிப்பதற்கும் மீண்டும் இவ்வாறன துர்பாக்கியனிலை ஏற்படாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடப்பது அவசியம் என மேலும் தெரிவித்துள்ளார்

அத்துடன் இவை எல்லாவற்றையும் விடுத்து இவ்வாறான துயர நிலையை பயன்படுத்தி உண்மை நிலையை மறைப்பதற்கு இனத்தையும் மதத்தையும் சாதகமாக பயன்படுத்தி யாரும் மதவாதம் இனவாதத்தையும் கக்கி யாரும் குளிர்காயதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டன அறிக்கைகளை விடுவதை விடுத்து நீதியை நிலை நாட்ட ஒத்துழைப்பு வழங்குங்கள்-மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் கோரிக்கை Reviewed by Author on April 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.