அண்மைய செய்திகள்

recent
-

ரிசாட் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பிற்கு 5பில்லியன் நிதி-அதிர்ச்சி தகவல்!




இலங்கை, வவுனியா தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு 5 பில்லியன் நிதி ஒதுக்கீடு சிறிலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வன்னிக்கான ஜனாதிபதியின் விசேட இணைப்பாளருமனா சமிந்த வாசல அவர்கள் இன்று (28.05.2019) பிற்பகல் 4 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில் வடமாகாண பனை அபிவிருத்திக்கு என 5பில்லியன் ரூபா நிதியினை நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த தொகையில் 2.5 பில்லியன் நிதி தற்சமயம் வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதி பணமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்த வாசல அவர்கள் ஆனால் வடமாகாண குடிநீர் வசதிகளுக்கு வெறும் 5 மில்லியன் ரூபா பணத்தையே ஒதுக்கியுள்ளார்.

வடமாகாணத்தில் பாரிய ஓர் பிரச்சினை மக்களின் குடிநீர் பிரச்சினையே இதற்கு வெறும் 5மில்லியன் பணம் போதுமாக இருக்குமா ? கேள்வி எழுப்பியுள்ளார்! தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியானது எதிர்வரும் தினங்களில் பாராளுமன்றில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவளிப்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார் இந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமானது பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாது தமது சுய அரசியல் இலாபத்திற்காக செயற்படுகிறதுடன் கடந்த காலங்களில் ஏற்பட குண்டு வெடிப்புக்கள், வில்பத்து பிரச்சினை, குருநாகலில் வைத்தியரால் ஏற்பட்ட இன அழிப்பு போன்ற விடயங்களை சாதாரண விடயமாக மெழுகு பூசிக்கொண்டு தமது கட்சியின் எதிர்கால வளர்ச்சியை மட்டும் சுயநலமாக கருத்தில் கொண்டு செயல்படுகிறது எனவும் வாசல அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது.
 
ரிசாட் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பிற்கு 5பில்லியன் நிதி-அதிர்ச்சி தகவல்! Reviewed by Author on May 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.