அண்மைய செய்திகள்

recent
-

யுத்தகாலத்தில் பாதுகாப்பு தேடி மதத்தலங்கள் சென்ற நாம் தற்போதய சூழ்நிலை பயமாக இருக்கின்றது-மௌலவி எஸ்.ஏ.ஆசீம்.



இலங்கை தேசிய சமாதானப் பேரவையும், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு
சங்கமும் இணைந்து மன்னார் மாவட்டத்தில் சர்வமத குழு மற்றும் மன்னார்
காவல்துறை ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிபனை கேட்போர் கூடத்தில் செவ்வாய் கிழமை (28.05.2019) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மன்னார் பெரிய பள்ளிவாசல் மௌலவியும் மன்னார் சர்வமத பேரவையின் இணைத் தலைவருமான எஸ்.ஏ.ஆசீம் கடந்த முப்பது வருட யுத்த காலத்தில் நாம் பாதுகாப்புத் தேடி மதத்
தலங்களுக்கு ஓடிச் சென்றோம். ஆனால் இப்பொழுது மதத்தலங்களுக்கே மத
வழிபாட்டுக்காக பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. இஸ்லாமியர் பெயரை
வைத்துக்கொண்டு வன்செயலில் ஈடுபட்ட காரணத்தால் என தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நாங்கள் தற்பொழுது கடைப்பிடிக்கும் நோம்பின் கடைசி காலத்தில்
நிற்கின்றோம். இருந்தும் எங்கள் மக்கள் மத்தியில் இன்னும் அச்சமும்
பயமும் நிலை கொண்டுதான் இருக்கின்றது. அதனால்தான் நாம் மதத்தலங்களில் பாதுகாப்பு எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் இவ் பய உணர்வு இன்றும் நிலை கொண்டிருப்பதால் கோவில், ஆலயங்கள், பள்ளிவாசல்களில் நாம் பாதுகாப்பு படையினரை வைத்துக் கொண்டு மத வழிபாடுகளை நடாத்தும் துர்பாக்கிய நிலை இருந்து வருகின்றது.


மன்னார்  மாவட்த்திலே சமாதானம் அகிம்iஷ, பாதகாப்பு, நல்லுரவு இவைகளை கட்டியெழுப்புவதற்காக இவ் மாவட்டத்pலுள்ள கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமிய மக்களுக்கிடையே தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சி திட்டத்pனூடாக நாங்கள் கடந்த காலங்களில்  பல்வேறு வேலைத் திட்டங்களை நடாத்திக் கொண்டு வந்தோம்.

இந்த வேலைத் திடங்களில் நானும் ஒரு பங்காளி என்ற வகையிலே எமது
மாவட்டத்திலே சிறு சிறு பிரச்சனைகள் நடைபெற்றபொழுதும் இவைகள் விஸ்வரூபம் எடுக்காத நிலையில் இந்த தேசிய சமாதான பேரவையின் வேலைத் திட்ட காரணமாக எமது இளைஞர்கள் ஒரு புரிந்தணர்வுடன் கட்டுக் கோப்புடன் இருக்கக் காணப்பட்டனர்.

இவ்வாறு எமது மாவட்ட செய்தியாளர்களும் இவ் மாவட்டத்தின் அமைதிக்கு
குந்தகம் விளைவிக்காத நிலையில் அவர்களின் பங்களிப்பை செய்து
வருகின்றார்கள்.

அத்துடன்  இங்கு எமது நான்கு மதத் தலைவர்களும் நல்ல
புரிந்துணர்வுடனும், நல்ல உறவுகளையும்  இந்த தேசி சமாதான பேரவையின்
நிகழ்ச்சி திட்டங்களுடன் இணைந்து செயல்படுகின்றார்கள்.

சென்ற உயிர்த்த ஞாயிறு நடைபெற்ற மிகவும் வருந்தக்கூடிய ஒரு வன்செயல் காரணமாக தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க, கிறிஸ்தவ சமூகம்
பாதிக்கப்பட்டபோதும்  இவ் பகுதி மக்கள்  ஜீரணிக்க முடியாத ஆறாத்
துயரிலும் கவலையிலும்  இருந்தும் இங்குள்ள மக்கள் குறிப்பாக இளைஞர்கள்
மதத் தலைவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் நிதானமாக இருந்து செயல்பட்டு
வருகின்றனர்.

தேசிய சமாதான பேரவை கடந்த காலத்தில் வழங்கிய பயிற்சிகள் செயல்
திட்டங்களும் மிகவும் கொடூரமான செயல்பாட்டிலும் இவ் மாவட்ட மக்களை
அமைதிக்கு கொண்டுள்ளது எனலாம்.

இவ் வன்செயலைத் தொடர்ந்து  மன்னார் மாவட்டத்pலுள்ள முஸ்லீம் பெரியார்கள், சட்டத்தரனிகள், மௌலவிகளாகிய நாங்கள் மன்னார் ஆயரைச் சந்தித்து எங்கள் கவலைகளையும் தெரிவித்ததுடன் இது இஸ்லாமியரின் கொள்கையள்ள இருந்தும் இஸ்லாமியரின் பெயரை வைத்துக் கொண்டு நடந்தேறியுள்ளது என தெரிவித்து அவரிடம் எங்கள் கவலைகளை தெரிவித்தோம்.   அமைதி வேண்டியும் அவரிடம் வேண்டி
நின்றோம்.

இவ்வாறு இப் பகுதி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் கூட்டி சமாதானம் நோக்கிய செயல்பாட்டை முன்னெடுத்து செல்லுமாறு அவர்களையும் நாங்கள் கேட்டிருந்தோம். அந்த வகையில் இவ் மாவட்டத்தில் அமைதியை காண்கின்றோம்.

அத்துடன் குண்டு வெடிப்பில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

நாங்கள் தற்பொழுது கடைப்பிடிக்கும் நேம்பின் கடைசி காலத்தில்
நிற்கின்றோம். இருந்தும் எங்கள் மக்கள் மத்தியில் இன்னும் அச்சமும்
பயமும் நிலை கொண்டுதான் இருக்கின்றது.

எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் இவ் பய உணர்வு இன்றும் நிலை கொண்டிருப்பதால் கோவில், ஆலயங்கள், பள்ளிவாசல்களில் நாம் பாதுகாப்பு படையினரை வைத்துக் கொண்டு மத வழிபாடுகளை நடாத்தும் துர்பாக்கிய நிலை இருந்து வருகின்றது.

கடந்த முப்பது வருட யுத்த காலத்தில் நாம் பாதுகாப்புத் தேடி மதத்
தலங்களுக்கு ஓடிச் சென்றோம். ஆனால் இப்பொழுது மதத்தலங்களுக்கே மத
வழிபாட்டுக்காக பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது.

வெளி மாவட்டங்களை  விட எமது மன்னார் மாவட்டத்தில் நாம் எல்லோரும்
ஒன்றுபட்டு வாழ்ந்து கொண்டிருப்பதால் நாம் தொடர்ந்து இவ் ஒற்றுமையை
கைக்கொள்ள வேண்எவர்களாக இரக்கின்றோம்.

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்ற ஒரு சமயம் அல்ல. இஸ்லாத்தில்
தெரிவிக்கப்படுகின்றது ஒரு மனிதனை  யார் கொல்லுகின்றானோ அவன் அந்த மனித சமூதாயத்தையும் கொன்றவன் என கருதப்படுவான்.

அவ்வாறு ஒரு மனிதனை எவன் பாதுகாக்கின்றானோ அவன் முழுச் சமூதாயத்தையும் பாதுகாக்கின்றவன் என குரான் தெரிவிக்கின்றது.

இஸ்லாத்திலே மதத்துக்காக ஒருவன் தற்கொலை செய்தால் அவன் சொர்க்கம் செல்வான் என வலைத் தளங்களில் வலம் வருகின்றது. இவ்வாறு இஸ்லாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. இவ்வாறானவர்கள் இஸ்லாமியரும் அல்ல.

இதன் காரணமாகத்தான் தற்கொலை செய்தவர்களை எவரும் பொறுப்பேற்காது அவர்களின் அரச செலவில் புதைக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.இதன் காரணமாகத்தான் முஸ்லீம் மக்களை இவ்வாறானவர்களை காட்டிக் கொடுத்தார்கள்.

மன்னார் மாவட்டம் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பிரதேசம். தங்கள் மதத்
தத்தில் கத்தோலிக்கர்கள் தாக்கப்பட்டதை யாரும் ஜீரணித்துக் கொள்ள
மாட்டார்கள். இருந்தும் பைபிலிலும், குரானிலும் துன்பம் செய்வோரை மன்னியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கமைய நாம் ஒருவரை ஒருவர் மன்னித்து எமது ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வோம் என இவ்வாறு தெரிவித்தார்.


யுத்தகாலத்தில் பாதுகாப்பு தேடி மதத்தலங்கள் சென்ற நாம் தற்போதய சூழ்நிலை பயமாக இருக்கின்றது-மௌலவி எஸ்.ஏ.ஆசீம். Reviewed by Author on May 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.