600வது கோல் அடித்த மெஸ்சி! அபார வெற்றி பெற்ற பார்சிலோனா -
கேம்ப் நியூ மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் போட்டியில், பார்சிலோனா-லிவர்பூல் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த முதல் பாதி ஆட்டத்தில், பார்சிலோனா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
அந்த அணி வீரர் சுவாரெஸ் கோல் அடித்தார். லிவர்பூல் அணி வீரர்கள் பெரும்பாலும் தங்களின் கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தாலும், பார்சிலோனா அணியின் தற்காப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியவில்லை.
ஆனால், இரண்டாம் பாதி ஆட்டத்தில் அனல் பறந்தது. 75வது நிமிடத்தில் சுவாரெஸ் அடித்த பந்து லிவர்பூல் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்ப வந்தது. அதனை மெஸ்சி பதற்றமின்றி கோலாக்கினார். அதன் பின்னர் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.

அதனைப் பயன்படுத்திக் கொண்ட மெஸ்சி, அபாரமாக கோல் அடித்து லிவர்பூல் அணியினரை கதிகலங்க வைத்தார். இது பார்சிலோனா அணிக்காக அவர் அடித்த 600வது கோல் ஆகும்.
விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அபாரமாக கோல் அடித்த மெஸ்சி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.


600வது கோல் அடித்த மெஸ்சி! அபார வெற்றி பெற்ற பார்சிலோனா -
Reviewed by Author
on
May 05, 2019
Rating:
No comments:
Post a Comment