உலகில் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் நாடு எது தெரியுமா? -
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த இடத்தை பராகுவே தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகில் 143 நாடுகளில் உள்ள சுமார் 151,000 மக்களிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளில், 10-ல் 7 பேர் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
87 சதவிகித மக்கள் தாங்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். 74 சதவிகித மக்கள் தங்களால் அன்றாடம் புன்னகையுடன் சக மனிதர்களை எதிர்கொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளனர்.
நேர்மறையான நாடுகளின் பட்டியலில் பராகுவேவுக்கு அடுத்து அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள், பனாமா, குவாத்தமாலா, மெக்சிகோ, எல் சால்வடோர், இந்தோனேசியா, ஹோண்டுராஸ், ஈக்வடார், கோஸ்டா ரிகா மற்றும் கொலம்பியா.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா முதலிடத்தில் உள்ளது.
உலகில் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் நைஜீரியாவில் 90 மில்லியன் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்.
வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என எண்ணுபவர்கள் பனாமா, குவாத்தமாலா அல்லது எல் சால்வடோர் ஆகிய நாடுகளுக்கு குடிபெயரலாம் என்கிறது ஆய்வு.
உலகில் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் நாடு எது தெரியுமா? -
Reviewed by Author
on
May 05, 2019
Rating:

No comments:
Post a Comment