காற்றுத் தூய்மையின்மையால் உடல்நிலை பாதிப்பு – ஃபிரான்ஸ் மீது வழக்குத் தொடுத்த தாயும், மகளும்!
காற்றுத் தூய்மையின்மையால் தமது உடல்நலம் பாதிக்கப்பட்டதற்காக ஃபிரான்ஸ் அரசாங்கம் மீது ஒரு தாயும் மகளும் வழக்குத் தொடுத்துள்ளனர் .
இத்தகைய சம்பவம் நீதிமன்றம் வரை வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். காற்றுத் தூய்மையின்மையை கட்டுப்படுத்த ஃபிரான்ஸ் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று இருவரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு அவர்கள் 160,000 யூரோ (179,000 டொலர்) இழப்பீடும் கோரியுள்ளமை இந்த வழக்கை மேலும் தீவிரப் படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர்கள் வசித்த செயிண்ட்-வன் வட்டாரத்தில் ஏற்பட்ட மிதமிஞ்சிய காற்று மாசு காரணமாக தனது மகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதாக தாய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மகளுக்கு ஏற்பட்ட சுவாசப் பிரச்சினை காரணமாகத் தன்னால் தொழிலுக்கும் ஒழுங்காகச் செல்ல இயலாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் பரிந்துரைப்படி இருவரும் தற்போது ஒர்லியன்ஸ் (Orleans) எனும் மற்றொரு வட்டாரத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுடைய உடல்நிலை இப்போது தேறியுள்ளதாக வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஃபிரான்ஸில் குறைந்தது 50 பேர் இதேபோன்ற சூழல் மாசு தொடர்பான வழக்குகளை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காற்றுத் தூய்மையின்மை காரணமாக ஒவ்வோரு ஆண்டும் அங்கு சுமார் 48,000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றுத் தூய்மையின்மையால் உடல்நிலை பாதிப்பு – ஃபிரான்ஸ் மீது வழக்குத் தொடுத்த தாயும், மகளும்!
Reviewed by Author
on
May 30, 2019
Rating:

No comments:
Post a Comment