காயங்களில் ஏற்படும் சீழ்கட்டிகளை சீக்கிரம் குணப்படுத்த வேண்டுமா....
இதனை சில வீட்டு வைத்தியங்கள் மூலமாக தடுக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

- வெந்தயத்தை பசை போல அரைத்து கொண்டு அதனை காயம்பட்ட இடத்தில் பூசவும். இது பாக்டீரிய தொற்று ஏற்படுவதை தடுப்பதுடன் காயத்தில் சீழ்கட்டுவதையும் தடுக்கிறது.
- செவ்வந்தி பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் ஒரு துணியை நனைத்து அந்த துணியை காயத்தின் மீது சிலநிமிடங்கள் வைக்கவும். இது காயத்தை உலர்த்துவதுடன் அது மேலும் பெரிதாகாமல் தடுக்கும்.
- தேனை காயத்தின் மீது நேரடியாக தடவ வேண்டும் என்ற அவசியமில்லை. தேனை உணவில் சேர்த்து கொள்வதே உங்கள் காயம் குணமாகும் வேகத்தை துரிதப்படுத்தும்.
- தினமும் இரண்டு முறை க்ரீன் டீ குடிக்கும் போது உங்களின் காயம் குணமாகும் வேகத்தை நீங்களே உணரலாம், அதுமட்டுமின்றி இது பல தொற்றுநோய்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.
- சுடுநீரில் நன்கு குளித்த பிறகு ஆலிவ் எண்ணெயை காயத்தின் மீது தடவி அங்கு மசாஜ் செய்யவும். குளிக்கும் நீரிலும் ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம் இது உங்கள் உடலு தூய்மைப்படுத்தும்.
- உப்பில் தண்ணீரை கலந்து உங்கள் காயத்தின் மீது தடவுவதும் உங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்தலாம். இது உங்கள் காயத்தை உலர வைப்பதுடன் காயத்தில் சீழ் கட்டுவதை தடுக்கிறது. இதனை தினமும் 3 அல்லது 4 முறை செய்யவும்.
- வெங்காயத்தை நறுக்கி அதனை அரைத்து காயத்தின் மீது பூசவும். இதனை 5 அல்லது 6 மணி நேரம் அப்படியே உலரும்படி விடவும். இது காயத்தில் இருக்கும் சீழை வெளியேற்றுவதுடன் காயத்தை வேகமாகவும் குணப்படுத்தும்.
- பூண்டை நன்கு அரைத்து அதனை அடிபட்ட இடத்தில் பூசி சில மணி நேரம் காயவைக்கவும். இதனால் சில நிமிடங்களுக்கு எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகலாம், ஆனால் இது நல்லதுதான் ஏனெனில் இது பாக்டீரியாக்களை அழிக்கும். காயத்தில் இருக்கும் சீழ் விரைவில் வெளியேறுவதை நீங்களே பார்க்கலாம்.
- அதிகளவு நீர் மற்றும் பழச்சாறு குடியுங்கள். இது உட்புற அமைப்புகளை சுத்தம் செய்வதுடன் உங்கள் உடலில் இருக்கும் நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. இது உங்கள் காயத்தை உலர வைப்பதுடன் காயத்தையும் விரைவில் குணப்படுத்தும்.
காயங்களில் ஏற்படும் சீழ்கட்டிகளை சீக்கிரம் குணப்படுத்த வேண்டுமா....
Reviewed by Author
on
May 29, 2019
Rating:
No comments:
Post a Comment