அண்மைய செய்திகள்

recent
-

துன்பத்தில் துவண்டுள்ள முஸ்லீம் சகோதர்களுக்கு நாம் ஆறுதல் உள்ளவர்களாக திகழ வேண்டும். ம.து.ம.வாழ்வு சங்கத் தலைவர் அருட்பணி.அ.சேவியர் குரூஸ் அடிகளார்

கடந்த ஈஸ்டர் விழாவின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்புக்குப் பின்பு
முஸ்லீம் சகோதர்கள் துன்பத்திலும் பயத்திலும் தொடர்ந்து வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள். இவர்களை நாம் சந்தித்து இவர்களுக்கு ஆறுதல்
உள்ளவர்களாக நாம் இருக்க நாம் எமது பங்களிப்பை வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வரும் தற்பொழுது மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவருமான அருட்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்ட சமயங்களுக்கிடையிலான சமாதான புரிந்துணர்வை கட்டியெழுப்புதல் தொடர்பாக இலங்கை தேசிய சமாதானப் பேரவையும், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கமும் இணைந்து மன்னார் மாவட்டத்தில் சர்வமத குழு மற்றும் மன்னார் காவல்துறை ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிபனை கேட்போர் கூடத்தில் செவ்வாய் கிழமை (28.05.2019)) நடைபெற்றது.

இவ் கூட்டத்துக்கு தலைமைதாங்கி அருட்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளார்
தொடர்ந்து பேசுகையில்

எமது நாடு இக்கட்டான நிலமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நாட்டில்
ஒழங்கையும் நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட அரசாங்கம் பாடுபடுகின்றது. இருந்தும் நாங்கள் அனைவரும் தொடர்ந்தும் பயத்துடன்
நடமாடிக்கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய பங்கு என்ன? என்ற கேள்வி எழும்புகின்றது. இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை. இதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றது.

எமது நம்பிக்கையும் அதுதான். சிறுதுளி பெரும் வெள்ளம் என்பது போல நமது
பங்களிப்பு சிறிய அளவாக இருந்தாலும் இறைவன் அதைக்கொண்டு வேண்டியதைச் செய்வார்.

இந்நிலையில் எமது முஸ்லீம் சகோதரர்கள் மிகவும் துன்பத்துடனும்,
பயத்துடனும் வாழ்கின்றனர். இவர்களை சந்தித்து எமது ஆறுதலை தெரிவித்து இதை எவ்வாறு எமது மாவட்ட சர்வமத பேரவையானது செயற்படுத்தலாமென கலந்துரையாடி இந் நாட்டினதும் ஒவ்வொரு உள்ளங்களிலும் அமைதியும் சமாதானமும் கிடைக்கப்பெற நாம் எமது பங்களிப்பை மனதார வழங்குவோம் என இவ்வாறு தெரிவித்தார்.

துன்பத்தில் துவண்டுள்ள முஸ்லீம் சகோதர்களுக்கு நாம் ஆறுதல் உள்ளவர்களாக திகழ வேண்டும். ம.து.ம.வாழ்வு சங்கத் தலைவர் அருட்பணி.அ.சேவியர் குரூஸ் அடிகளார் Reviewed by Author on May 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.