முஸ்லிம் பாடசாலை வளவில் வாள் மற்றும் காவி உடைகள்: அதிபர் உட்பட மூவர் கைது -
களுத்துறை பண்டாரகமை, அட்டுலுகமை ஜயகொடி கந்த மற்றும் மாராவ பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், அஸ்கஸ் சாலி முஸ்லிம் ஆரம்ப பாடசாலை வளாகத்தில் இருந்து, வாள், காவி உடை மற்றும் மஞ்சள் சால்வைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் அதிபர் உட்பட மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளவில் இருந்து 7 காவி உடைகள், மூன்று வாள்கள், மூன்று பயணப் பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மர ஆலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புனித பைபில், பூசையின் போது பயன்படுத்தப்படும் மஞ்சள் சால்கள், 34 காவி உடைகள் என்பவற்றை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாணந்துறை பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் மற்றும் இராணுவ கமாண்டோ அதிகாரிகள் இணைந்து இந்த தேடுதலை நடத்தியிருந்தனர்.
முஸ்லிம் பாடசாலை வளவில் வாள் மற்றும் காவி உடைகள்: அதிபர் உட்பட மூவர் கைது -
Reviewed by Author
on
May 29, 2019
Rating:

No comments:
Post a Comment