உலக சாதனை படைத்த இங்கிலாந்து நட்சத்திரம் -17 சிக்ஸ்..
மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர். நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இயான் மோர்கன் அதிரடியால் இங்கிலாந்துஅணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய இயான் மோர்கன் 71 பந்துகளில் 148 ஓட்டங்கள் குவித்தார். இதில், 4 பவுண்டரிகள், 17 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற உலக சாதனையை இயான் மோர்கன் படைத்துள்ளார். இவர், 16 சிக்ஸர் அடித்த இந்திய வீரர் ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்கா வீரர் ஏ பி டிவில்லியர்ஸ், மேற்கிந்திய தீவுகள் வீரர் கெயில் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதே சமயம் 57 பந்துகளில் சதம் விளாசிய இயான் மோர்கன் உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய நான்காவது வீரராக புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
உலக சாதனை படைத்த இங்கிலாந்து நட்சத்திரம் -17 சிக்ஸ்..
Reviewed by Author
on
June 19, 2019
Rating:
No comments:
Post a Comment