இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! மீறினால் 5 வருட சிறைத்தண்டனை -
இலங்கை மக்களின் தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அல்லது புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றவாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அல்லது 5 வருட சிறைத்தண்டனையை விதிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அருகில் உள்ள பொலிஸிற்கு அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டை காணாமல் போகுமிடத்து, புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்குமாயின் கிராம உத்தியோகத்தர் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இன்னொருவரின் தேசிய அடையாள அட்டையை தம்வசம் வைத்திருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! மீறினால் 5 வருட சிறைத்தண்டனை -
Reviewed by Author
on
June 13, 2019
Rating:
Reviewed by Author
on
June 13, 2019
Rating:


No comments:
Post a Comment