மன்னாரில் நடு நிசியில் திடீரென முளைத்த மாதா
முசலிப்பிரதேசத்தையும் நானாட்டான் பிரதேசத்தையும் இணைக்கும் அருவியாற்றுப்பாலத்தின் அருகில் 8 அடி நீளமான கொங்ரீட் தூண் அமைத்து இனந்தெரியாதநபர்களால் இந்த மாதா சிலை கடந்த வாரம் இரவில் நடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இரவோடு இரவாக குறித்த பகுதியில் மாதா சிலை கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்க படுகின்றது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இலங்கை நாடானது பதட்டத்தில் இருந்து வெளிவரவில்லை மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாட்டினுடைய தலைவர்களும் மதத்தலைவர்களும் உழைத்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மன்னார் அருவியாற்றுப்பாலத்தின் அருகில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபமானது மதங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்த ஏதுவாக அமையும் என்று பொது மக்களும் மதத்தின் பால் சாராத நடுநிலையாளர்களும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
பிரதான வீதியில் மதவழிபாட்டு சின்னங்களை யாரும் நிறுவக்கூடாது என்ற சுற்றுநிருபங்கள் இருக்கின்ற போதும்.இதனை கூட கருத்தில் கொள்ளாமல் இரவு நேரத்தில் இந்த சிலையினை நிறுவியுள்ளார்கள்.
Q
மன்னாரில் நடு நிசியில் திடீரென முளைத்த மாதா
Reviewed by Admin
on
June 18, 2019
Rating:

No comments:
Post a Comment