சீனாவை முறியடித்து இந்தியா முதலிடத்தை பிடிக்கும்: ஐ.நா அறிக்கை -
ஐ.நா. உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டது. உலக மக்கள் தொகை கண்ணோட்டம் என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை நேற்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அதிக மக்கள் தொகை உள்ள நாடாக இருக்கும் சீனாவை முறியடித்து, 2027-ம் ஆண்டில் இந்தியா அந்த இடத்தை பிடிக்கும்.
2019-ம் ஆண்டில் இருந்து 2050-ம் ஆண்டு வரையில் இந்தியாவின் மக்கள் தொகை 27.3 கோடி அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக மக்கள் தொகை 2050ஆம் ஆண்டில் 9.7 பில்லியனை எட்டும். அப்போது உலக மக்கள் தொகையில் பாதி, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, அமெரிக்கா, எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, தான்ஸேனியா ஆகிய 9 நாடுகளில் இருப்பர்.
அதே நேரத்தில் சீனாவின் மக்கள் தொகை 2.2 விழுக்காடு குறையும் என்று அறிக்கை குறிப்பிட்டது. தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 72.6 ஆண்டுகளாக உள்ளது. 2050ஆம் ஆண்டு அது 77.1 ஆக உயருமென்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
சீனாவை முறியடித்து இந்தியா முதலிடத்தை பிடிக்கும்: ஐ.நா அறிக்கை -
Reviewed by Author
on
June 19, 2019
Rating:

No comments:
Post a Comment