மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்...
மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்கடந்த மாதம் இலங்கையில் பல இடங்களில் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடு பிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் முப்படையினறுடைய பங்குபற்றுதலுடன் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் மன்னார் பகுதிகளில் இடம் பெற்று கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் முஸ்லீம் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது தொடர்பாகவும் அதே நேரத்தில் காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் சோதிக்கப்படுவதாகவும் நடத்தப்படுவதாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
குறித்த கருத்துக்களை பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாடுமுழுவதும் அவசர கால நிலை காணப்படுவதால் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கல் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை பெற்றுள்ளோம்.
குறிப்பாக முஸ்லீம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பாகவும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்னும் சில காணிவிடயங்கள் தொடர்பாகவும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர் குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக தனி நபர்களாகவும் பொது விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடனும் இராணுவம் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகலுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்...
Reviewed by Author
on
June 20, 2019
Rating:

No comments:
Post a Comment