ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் பல்வேறு அபிவிருத்திகள் பணிகள் ஆரம்பம்! -
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு உட்பட்ட புளியங்கூடல் பகுதியில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இது குறித்த நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. புளியங்கூடல் கிராமத்திற்கு 70 லட்சம் ரூபாய், நாடாளுமன்ற உறுப்பினரால் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று வீதிகள், மைதானம் போன்றவற்றுக்கான புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், வேலணை பிரதேசசபை உறுப்பினர் அசோக்குமார், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் தமிழரசுக் கட்சியின் அமைப்பாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் பல்வேறு அபிவிருத்திகள் பணிகள் ஆரம்பம்! -
Reviewed by Author
on
June 06, 2019
Rating:

No comments:
Post a Comment