மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பகல்லூரியின் அதிபர் ஓய்வு-புதிய அதிபருக்கா காத்திருக்கும் மாணவர்கள்...
கணபதிப்பிள்ளை செந்தில்வேற்பிள்ளை போதனாசிரியர் மின் எந்திரவியல் SLTES-11 தும்பளை பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிறப்பிடமாக கொண்ட இவர் 04-01-1999 மட்டக்களப்பு சம்மாந்துறை வவுனியா தொழிநுட்பகல்லூரிகளின் போதனாசிரியராக பிரதி அதிபராக கடமையாற்றி 01-07-2014 மன்னார் தொழிநுட்பகல்லூரியின் அதிபராக கடமைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது வெறுமையான கட்டிடத்துடன் 10 ஏக்கர் காடாகவும் இருந்தது அலுவலக பொருட்களும் வாகனத்திற்கு ஓட்டுநரும் இல்லை காடுகளை துப்பரவு செய்தும் தானே வாகனத்தின் ஓட்டுநருமாக செயற்பட்டார். அதுமட்டுமல்ல யுனிசெப் ILO போன்ற நிறுவனங்களின் மூலமும் அலுவலத்திற்கு தேவையான கணனிப்பொருட்கள் இதரப்பொருட்களையும் தண்ணீர் குடிதாங்கி மற்றும் பயிற்சிப்பட்டறைகள் வகுப்பறைகள் ஆசிரியர் தங்குமிடவசதிகள் சுற்றிவர வேலியமைத்து அழகியமுறையில் கல்லூரியை வழிநடத்தியது.
அத்துடன் நிரந்தமான போதனாசிரியர்களையும் பயிற்சியாசிரியர்களையும் பல முயற்சிகளை மேற்கொண்டும் இன்னும் பல வழிகளில் பணியினை தொடர்ந்து குறிப்பாக இதுவரை 05வருடங்களில் 500மாணவர்கள் பயிற்சி பெற்றுவெளியேறியுள்ளனர் நல்ல இடங்களில் தொழில்வாய்ப்பினை பெற்றுள்ளனர் தற்போதும் 100ற்கும் அதிகமான மாணவர்கள் பல துறைகளில் பயிற்சிகளைப்பெற்று வருகின்றனர்.
அது போல முதலாவது குழு தேசிய தொழில்நுட்பபயிற்சி சான்றிதழ்(குடிசார் எந்திரவியல்)NATIONAL CERTIFICATE IN TECHNOLOGY -(CIVIL ENGINEERING) பகுதி நேரமாக 03வருடங்கள் நிறைவு செய்து 13 மாணவர்களில் 12 மாணவர்கள் வெளியேறுகின்றனர் இத்தேர்ச்சியானது மற்ற மாவட்டங்களான யாழ்ப்பாணம் வவுனியா கிளிநொச்சி போன்ற தொழிநுட்ப கல்லூரிகளிடம் ஒப்பிடும் போது முதல் நிலையில் உள்ளது.
இந்த சிறப்பான செயற்பாட்டிற்கு 05வருடங்களும் என்னுடன் இருந்து செயலாற்றிய அத்தனை போதனாசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தற்போது வவுனியா தொழிநுட்பகல்லூரியின் அதிபராக கடமையாற்றுகின்ற திரு.A.நற்குணேஸ்வரன் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் வருகைதரும் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் கல்வித்திணைக்களங்கள் உருவாகி ஓரிருவருடங்களில் மூடுவிழா கண்டவிடும் அதற்கு காரணம் மாணவர்களின் வரவு குறைவும் பொறுப்பாக கடமையினை மேற்கொள்ளாதா நிர்வாகமும் அதே போன்று இக்கல்லூரியும் மூடுவிழாக்காணமல் இருக்கவேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்ககை எடுக்கவேண்டும்.
21-05-2019 அன்றுடன் ஓய்வுபெற்றுச்செல்லும் கணபதிப்பிள்ளை செந்தில்வேற்பிள்ளை போதனாசிரியர் மின் எந்திரவியல் SLTES-2
அவர்களுக்கு (வருகை தரும் விரிவுரையாளர்களால் பொன்னாடை சந்தன மாலை அணிவித்து கௌரவித்த தோடு தங்கமோதிரம் பரிசளித்துள்ளனர்)பாராட்டுக்கள் இனிவரும் புதிய அதிபரும் சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என எதிர்பாரக்கின்றோம்.
https://youtu.be/kTty2j6MqWE
மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பகல்லூரியின் அதிபர் ஓய்வு-புதிய அதிபருக்கா காத்திருக்கும் மாணவர்கள்...
Reviewed by Author
on
June 06, 2019
Rating:

No comments:
Post a Comment