வெறும் வார்த்தைகளில் வராது மாற்றம்.. மக்களிடம் படு வேகமாக நெருங்கும் நாம் தமிழர் கட்சியினர்!
சென்னை-இந்த வேலை, அந்த வேலை என்றெல்லாம் நாம் தமிழர் கட்சி பார்ப்பது இல்லை.. எதுவானாலும் என்ன அது மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று ஒவ்வொன்றையும் பார்த்து அணுகுவதே இந்த கட்சியின் சிறப்பு!
என் மக்கள், என் இனம் என்ற ஒரு கோட்பாட்டை தூக்கி எறிந்து பொதுமக்களுடன் கலந்த கட்சிகளில் பிரதானமானவை நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம்தான்.
இவர்கள் மக்களை நெருங்குவதே அவர்களின் பிரச்சனைகளை முன் வைத்துதான். அதனால்தான் வாக்கு வங்கி மற்றும் தமிழக அரசியல் அந்தஸ்துகளில் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.
என்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு
பிரச்சனைகள் அதிலும் நாம் தமிழர் கட்சிக்கு ஒருவரையறை, எல்லை, நியதி இதெல்லாம் கிடையாது. எதுவானாலும் இறங்கி தூர் வாருவதுதான் பிரதான பணியே. அது மண், மக்கள், எதை பாதிக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி.
பிடிக்குளம் கிராமம்
பிடிக்குளம் கிராமம்
அந்த வகையில், மேல்மருங்கூர் ஊராட்சியில் பிடிக்குளம் என்ற கிராமத்திலும் சேவையை விரிவுபடுத்தி உள்ளனர். அந்த கிராமத்தில் நீர்நிலையில் உள்ள, சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் அதி தீவிரமாக ஈடுபட்டனர்.
அவலம் தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடும் நிலையில், கிணற்றில் இருக்கும் நீரை கூட எடுக்க முடியாதவாறு அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த அவலத்தை உணர்ந்த அக்கட்சியினர், கிணற்றை சிமெண்ட் போட்டு வேலையை ஆரம்பித்தனர்.
மேல்மருங்கூர் ஊராட்சி பிடிக்குளம் கிராமத்தில் நீர்நிலையில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்
ஈரம்-மண்ணோடு மண்ணாக, ஒட்டிப்போய் இருந்த கிணற்றை சுற்றி சீரமைத்து, சிமெண்ட் போட்டு, மக்கள் எளிதாக தண்ணீர் இறைக்கும்படி சீரமைத்துவிட்டனர்! நாம் தமிழர் கட்சியினரின் இந்த செயலை கண்டு, இப்போது கிணற்றில் மட்டுமல்ல.. கிராம மக்களின் மனதிலும் ஈரம் ஊற்றெடுக்கிறது!
வெறும் வார்த்தைகளில் வராது மாற்றம்.. மக்களிடம் படு வேகமாக நெருங்கும் நாம் தமிழர் கட்சியினர்!
Reviewed by Author
on
June 11, 2019
Rating:

No comments:
Post a Comment