மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் ஆரம்ப சுகாதார வலுவூட்டல் திட்டம் ஆரம்பம்-படங்கள்
ஆரம்ப சுகாதார வலுவூட்டல் திட்டத்திற்காக மன்னார் மாவட்டத்தில் பேசாலை மற்றும் அடம்பன் வைத்தியசாலைகள் தெரிவாகியுள்ள நிலையில் குறித்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை 11-06-2019 மாலை பேசாலை பிரதேச வைத்தியசாலையில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார வலுவூட்டல் அபிவிரித்தித் திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் வேலைத்திட்டம் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சினூடாக குறித்த அபிவிருத்தித் திட்டத்தினூடாக வெளி நோயாளர் பகுதி கனணி மயமாக்கல், ஆய்வு கூடங்கள், பரிசோதனைகள், இன்னும் பல்வேறு வசதிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையுடனான இணைப்புகள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 5 ஆண்டுத்திட்டமாக நடை முறைப்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக குறித்த திட்டம் மன்னார் மாவட்டத்திற்கென அடம்பன் மற்றும் பேசாலை வைத்திய சாலைகளில் அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.காண்டீபன் தலைமயில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் உதவி பிரதேச செயலாளர் சிவசம்பு கனகாம்பிகை, மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் ,வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
June 11, 2019
Rating:

No comments:
Post a Comment