அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணிநேரம் காத்திருப்பு- பிரபல பாடகர் எஸ்.பி.பி வேதனை
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள கூர்கா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசுகையில், மனிதன் குரங்கில் இருந்து வந்தவன். ஆனால் குரங்குகள் தங்களது கடமையை சரியாக செய்து வரும் நிலையில் மனிதன் தான் செய்வதில்லை. குறிப்பாக தண்ணீரை சரியான முறையில் சேமித்து வைக்காததால் இன்றைக்கு குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு முன்பு அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணி நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிற எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை யாரும் வீணடித்து விடாதீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு முன்பு அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணி நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிற எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை யாரும் வீணடித்து விடாதீர்கள் என சமூக அக்கறையுடன் பேசினார்.
அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணிநேரம் காத்திருப்பு- பிரபல பாடகர் எஸ்.பி.பி வேதனை
Reviewed by Author
on
June 19, 2019
Rating:

No comments:
Post a Comment