மன்னார்-முருங்கன் ஜெயா பாலாஜின் தலைப்பிரசவம் கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள்
அவர்களின் தலைப்பிரசவம் கவிதை நூல் வெளியீட்டு விழா மன்னார் தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் 01-06-2019 சனிக்கிழமை காலை 9-30 மணியளவில் நானாட்டான் கலாசாரமனடபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்நிகழ்வில் அருட்தந்தையர்கள் தமிழ்சங்க அங்கத்தவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
கவிதாயினி ஜெயா பாலாஜியின் தலைப்பிரசவம் முதலாவது கவிதை நூலினை தனது பெற்றோருக்காக சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.
அருட்பணி அன்புராசா அவர்களின் ஆசியுரையும்
எழுத்தாளரும் ஆய்வாளருமான திரு எஸ்.டேவிட் அவர்களின் அணிந்துரையும்
மன்னார் தமிழ் சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளாரின் அறிமுக உரையும்
அதிபர் திரு.செ.பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துரையும்
நூலாசிரியரின் என்னுரையும் இந்த நூலின்தேவையையும் நூலாசிரிரின் திறமையினை குறித்தும் தகவல்களை தந்திருக்கின்றன. காலத்தின் தேவைகருதி தான் கடந்து வந்த பாதையின் துன்பதுயரங்களையும் வலியினையும் கவிவரிகளாக்கி தலைப்பிரவசமாக தந்துள்ளார் மன்னார் கலைஞ்ர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.
கவிதாயினி வெற்றிச்செல்வியின் வெளியீட்டுரையும் கலைஞர்களின் வாழ்த்துரைகளுடனும் அழகிய நடனமும் விழா சிறப்பாக இனிதே நிறைவுற்றது.

மன்னார்-முருங்கன் ஜெயா பாலாஜின் தலைப்பிரசவம் கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள்
Reviewed by Author
on
June 02, 2019
Rating:

No comments:
Post a Comment