பிரான்சை விட்டு வெளியேறிய 100 புலம்பெயர்ந்தோர்: கண்ணீர் பின்னணி!
அந்த கண்ணீரின் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள்! ஒரு புறம் இன வெறி பரவும் ஓரிடத்திலிருந்து தப்பி வந்து விட்டோம் என்பது. இன்னொன்று பல ஆண்டுகளாக தாங்கள் கனவு கண்ட, தங்கள் தாத்தா பாட்டி வாழ்ந்த மண்ணில் கால் வைத்த மகிழ்ச்சி.
பாரீஸுக்கு வடமேற்கில் அமைந்துள்ள Levallois-Perretஇல் வாழ்ந்து வந்த Simonம் அவரது மனைவி Alice Midalம், தாங்கள் பிரான்சை விட்டு செல்ல முடிவெடுத்ததற்கு பிரான்சில் யூதர்களின் நிலைமைதான் காரணம் என்கிறார்.
76 வயதில், இது பிரான்சை விட்டுச் செல்வதற்கான நேரம் என முடிவெடுத்த Simonம் அவரது மனைவி Alice Midalம், பிரான்சிலிருந்து இஸ்ரேல் புறப்படும் 100 பேரில் இருவராக புறப்பட்டார்கள்.
பல யூத அமைப்புகள், நிறுவனங்களில் பெரும் பொறுப்பு வகித்த Midal, பிரான்சில் அதிகரித்து வரும் யூத இன வெறுப்புதான் இது பிரான்சை விட்டு வெளியேறுவதற்கான தருணம் என முடிவெடுக்க வைத்ததாக தெரிவிக்கிறார்.
பிரான்சிலுள்ள யூதர்களின் எதிர்காலம் குறித்து அவர்களிடம் கேட்டபோது, அரசு தலையிட்டு ஏதாவது கடுமையான நடவடிக்கை எடுத்தாலொழிய அங்கிருப்பவர்களின் நிலைமை குறித்து நேர்மறையாக சொல்ல ஒன்றுமில்லை என்கிறார்கள் இருவரும்.
பிரான்சிலிருந்து இஸ்ரேல் புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகளில் குறைந்த வயதுள்ள பயணிக்கு வயது இரண்டு, அதிக வயதுடைய பயணி, 79 வயதுடைய ஒரு முதியவர்!
பிரான்சை விட்டு வெளியேறிய 100 புலம்பெயர்ந்தோர்: கண்ணீர் பின்னணி!
Reviewed by Author
on
July 19, 2019
Rating:

No comments:
Post a Comment