ஓலைத்தொடுவாய்,நடுக்குடா பகுதிகளில் இருந்து 1114 கிலோ பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்பு-
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் காட்டுப்பகுதி மற்றும் நடுக்குடா கடற்கரை பகுதியில் இருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் நேற்று சனிக்கிழமை 29.06.2019 மீட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை 29.06.2019காலை ஓலைத் தொடுவாய் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 126.5 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் கண்டு பிடித்தது மீட்டுள்ளனர்.
இதே வேளை மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று சனிக்கிழமை கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 988.4 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நடுக்குடா கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 20 பொதிகளில் இருந்த பீடி இலைகளை கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓலைத்தொடுவாய் மற்றும் நடுக்குடா பகுதிகளில் இருந்து 1114 கிலோ 9 கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று சனிக்கிழமை 29.06.2019காலை ஓலைத் தொடுவாய் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 126.5 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் கண்டு பிடித்தது மீட்டுள்ளனர்.
இதே வேளை மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று சனிக்கிழமை கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 988.4 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நடுக்குடா கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 20 பொதிகளில் இருந்த பீடி இலைகளை கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓலைத்தொடுவாய் மற்றும் நடுக்குடா பகுதிகளில் இருந்து 1114 கிலோ 9 கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓலைத்தொடுவாய்,நடுக்குடா பகுதிகளில் இருந்து 1114 கிலோ பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்பு-
Reviewed by Author
on
July 01, 2019
Rating:

No comments:
Post a Comment