மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மாவட்ட தேனீ மாற்றுத் திறனாளிகள் சுய உதவி அமைப்பும் மன்னார் மாவட்டச் செயலகமும் இணைந்து செவ்வாய்க்கிழமை 16.07.2019 அன்று மன்னார் நகரசபை மைதானத்தில் மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக
திரு.C.A.மோகன்ராஸ் அரசாங்க அதிபர் மன்னார்
திரு.S.குணபாலன் மேலதிக அரசாங்க அதிபர் மன்னார்
இவர்களுடன் மன்னார் மாவட்டத்தின் 05 பிரதேசசெயலகத்தின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
வருடா வருடம் நடைபெறுகின்ற மாற்றுத்தினாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் கலந்து கொண்ட விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்நிகழ்விற்கு இவர்களுடன் பல நல்ல உள்ளங்களும் தமது ஆதரவினை வழங்கி இருந்தனர்.

மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
Reviewed by Author
on
July 18, 2019
Rating:

No comments:
Post a Comment