சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் திகதியை அறிவித்த இஸ்ரோ! -
சந்திரயான் 2 விண்கலத்தினை நிலவுக்கு அனுப்ப, கடந்த திங்கட்கிழமையன்று விண்ணில் செலுத்த இருந்தது இஸ்ரோ. ஆனால், ஏவப்படுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சந்திரயானை நிலவுக்கு அனுப்பும் சூழல் வரும் 21, 22ஆம் திகதிகளில் மட்டுமே உள்ளதாகவும், அதனை தவறவிட்டால் செப்டம்பரில் தான் அனுப்ப முடியும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சந்திரயான் 2வில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில், இஸ்ரோவின் தொழில்நுட்பப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த 2 நாட்களில் கோளாறு முழுமையாக சரிசெய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், வரும் 22ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டதால், அன்றைய தினம் (22ஆம் திகதி) மதியம் 2.43 மணிக்கு விண்கலம் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் திகதியை அறிவித்த இஸ்ரோ! -
Reviewed by Author
on
July 19, 2019
Rating:
No comments:
Post a Comment