5 நாள்.. 3000 வீரர்கள்..இடைவிடாத கால்பந்து போட்டி: உலக சாதனை படைக்கும் பிரான்ஸ் -
பிரான்ஸில் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி லியோன் நகரில் நடைபெற உள்ளது. அதே சமயம் 3000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் ஐந்து நாள் இடைவிடாத கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
ஒரே விளையாட்டில் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் விளையாடிய உலக சாதனையை முறியடிப்பதோடு, வாய்ப்பு, சமத்துவம் மற்றும் விளையாட்டில் பெண்களுக்கு மரியாதை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கால்பந்து வீரர்கள் நம்புகின்றனர்
இப்போட்டி யூன் 28ம் திகதி முதல் யூலை 1ம் திகதி வரை ஒலிம்பிக் லியோனாய்ஸ் அகாடமியல் நடைபெறுகிறது. வெப்ப அலை காரணமாக தொடக்க ஒரு நாள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட வீரர்கள் நீரேற்றத்துடன் இருக்மாறு இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கிராஸ்ரூட்ஸ் இலாப நோக்கற்ற அமைப்பான ஈக்வல் பிளேயிங் ஃபீல்ட் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. விளையாட்டில் பெண்களை மேம்படுத்தும் முயற்சியாகும் என ஈக்வல் பிளேயிங் ஃபீல்ட் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
5 நாள்.. 3000 வீரர்கள்..இடைவிடாத கால்பந்து போட்டி: உலக சாதனை படைக்கும் பிரான்ஸ் -
Reviewed by Author
on
July 01, 2019
Rating:

No comments:
Post a Comment