தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால்... சாள்ஸ் நிர்மலநாதனுக்கு ஒரு கடிதம்-வலம்புரி
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதன் அவர்களுக்கு அன்பு வணக்கம்.
நேற்று முன்தினம் (24) பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரையை அறிய முடிந்தது. தென்கயிலை ஆதீன முதல்வர் மீது கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் வைத்து சிங்கள இனம் சார்ந்த சிலர் சுடுநீர் ஊற்றிய சம்பவத்தைக் கண்டித்து உரையாற்றியிருந்தீர்கள்.
தென்கயிலை ஆதீன சுவாமி மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இதுவரை கண்டிக்கவோ கருத்துக் கூறவோ இல்லை.
பரவாயில்லை. இந்து சமயம் சார்ந்த விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எப்போதும் மெளனமாகவே இருந்து வந்துள்ளது.
ஆகையால் அதுபற்றி நாம் இவ்விடத்தில் கருத்துக் கூறவேண்டிய தேவையிராது.
மாறாக, தாங்கள் ஆற்றிய உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன் இருந்திருந்தால், தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றியிருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தீர்கள்.
இவ்வாறு நீங்கள் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி நிறைந்த அர்த்தமுடையது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந் திருந்தால், தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றுகின்ற சம்பவம் மட்டு மல்ல, மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருக்கேதீச்சரத் திருத்தலத்துக்கு நுழை வாயில் வளைவு கட்டப்படுவதையும் தடுத் திருக்க முடியாது.
இதையும் நீங்கள் பாராளுமன்றத்தில் கூறியிருக்க வேண்டும். ஆனால் அதனை நீங்கள் கூறவில்லை.
இதற்குக் காரணம் மன்னார் திருக்கேதீச்சரத்துக்கென நுழைவாயில் அமைப்பதை தடுத் தவர்களில் தங்களுக்கும் பெரும்பங்குண்டு.
வன்னி மாவட்டத்திலுள்ள இந்து மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பி னராக வந்த தாங்கள், கத்தோலிக்கமும் இந்து மதமும் எனக்குச் சமமானவை என்று கூறியிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு கருதாமல் நடுவுநிலை எனும் அறத்தை மீறி கத்தோலிக்க மதத்தின் பால் நின்று; தமிழினத்தைப் பிரிக்கின்ற முயற்சியில் ஈடுபட்ட ஒரு சில கத்தோலிக்க மதகுருமாரின் கைப்பொம்மையாக இருந்தீர்கள்.
அப்படியானால் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சிங்கள மத வெறியர்களுக்கும் தங்களுக்குமான வித்தியாசம் என்ன என்பது இந்து மக்களுக்குப் புரியாமலே உள்ளது.
எம்மைப் பொறுத்தவரை புலிகளின் தலை வர் பிரபாகரன் இருந்திருந்தால்; கன்னியா வில் அவர்கள் செய்ததும் மன்னாரில் நீங்கள் செய்ததும் ஒரே தராசில் நிறுவை இடப்பட்டிருக்கும்.
இதற்கு மேலாக; தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால், கூட்டமைப்பின் தலைமை இப்படியயல்லாம் செய்திருக்க முடியுமா என்பதையும் ஒரு கணம் சிந்தித்து அதனையும் உள்ளடக்கி நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தால், அது தக்கார் உரை என்று போற்றப்பட்டிருக்கும்.
வலம்புரி பத்திரிகை
வலம்புரி பத்திரிகை
தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால்... சாள்ஸ் நிர்மலநாதனுக்கு ஒரு கடிதம்-வலம்புரி
Reviewed by Admin
on
July 28, 2019
Rating:

1 comment:
ஆமேன்.
Post a Comment