ஈரானைத் தொடர்ந்து துருக்கி மீதும் பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா! -
ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால், F-35 ரக போர் விமானம் தயாரிப்பில் துருக்கிக்கு அளித்து வரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். மேலும், ஜூலை 31ஆம் திகதி இந்த ஒப்பந்தத்தை துருக்கி ரத்து செய்ய வேண்டும் என கெடு விதித்தார்.
ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பினை பொருட்படுத்தாத துருக்கி, நேற்று முன்தினம் S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களில் முதல் கவனை ரஷியாவிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், துருக்கி நாட்டின் மீது அடுத்த வாரத்துக்குள் பொருளாதார தடை விதிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின் மீது விதிக்கப்படும் பொருளாதார தடை துருக்கி மீதும் திணிக்கப்படும் என்று அமெரிக்க அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானைத் தொடர்ந்து துருக்கி மீதும் பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா! -
Reviewed by Author
on
July 15, 2019
Rating:

No comments:
Post a Comment