யாழில் பௌத்த விகாரைகளை அமைச்சர் மனோ நிறுத்த வேண்டும்! சிறீதரன் கோரிக்கை -
கிளிநொச்சி - வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் திருகோணமலையில் வெந்நீர் ஊற்று போன்ற பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. யாழில் மிக பிரமாண்டமான முறையில் பௌத்த விகாரை திறந்து வைக்கப்படுகின்றது.
நாம் தென்னிலங்கையில் பௌத்த விகாரைகள் எங்கு அமைக்கப்பட்டாலும் அது தொடர்பில் கதைப்பதில்லை. ஆனால் சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைப்பது தொடர்பில் பேச வேண்டி உள்ளது.
இவ்வாறு தமிழர் பகுதிகளில் குறிப்பாக முல்லைத்தீவு, திருகோணமலை பகுதியில் புத்த சிலைகள் அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு அமைச்சர் மனோ கணேசன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.
யாழில் பௌத்த விகாரைகளை அமைச்சர் மனோ நிறுத்த வேண்டும்! சிறீதரன் கோரிக்கை -
Reviewed by Author
on
July 15, 2019
Rating:

No comments:
Post a Comment