உடலில் அசிங்கமாக காணப்படும் மருவை போக்கனுமா?
பாப்பிலோமா வைரஸால் ஏற்படும் மருக்களுக்கு முக்கியக் காரணம் சரியான சருமப் பராமரிப்பின்மையே காரணமாகும்.
அதுமட்டுமின்றி இயல்பிலேயே எண்ணெய் மற்றும் வியர்வைச்சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பவர்களுக்கு மருக்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
இதனை மருவை சருமத்தில் கூடுதலாக ஏற்படக்கூடிய திசுக்களின் கூட்டு என்றும் சொல்லப்படுகின்றது.
சருமத்தில், ஃபிரெக்கிள் எனப்படும் மச்சம் மாதிரியான சிறு சிறு புள்ளிகளாக முதலில் தோன்றும்.
இந்த நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருவாக உருவெடுப்பதற்கு முன்பே தடுக்கமுடியும்.
அந்தவகையில் இதற்கு இயற்கை முறையிலே எளிதில் மருவினை போக்க முடியும். அற்கு கத்தரிக்காய் பெரிதும் உதவி புரிகின்றது.
இதில் பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னிடம் கொண்டுள்ள கத்திரிக்காய் சில அழகு சார்ந்த நன்மைகளும் கொண்டுள்ளது.
அந்தவகையில் கத்தரிக்காயை கொண்டு முகத்தில் காணப்படும் மருவை எளிதில் போக்க முடியும். தற்போது அது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- கத்தரிக்காய்
- பேன்டேஜ்
செய்முறை
மருவை மூடும் அளவு கொண்ட மெலிதாக நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் ஒரு பேன்டேஜ்ஒவ்வொரு இரவும், உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒரு துண்டு கத்திரிக்காயை எடுத்து மருவில் வைத்து அது விழாமல் தடுக்க ஒரு பேன்டேஜ் போட்டு மூடிக் கொள்ளவும்.
தொடர்ந்து இப்படி செய்து வருவதால் அந்த மரு எளிதாக விழுந்து விடுவதை நம்மால் காண முடியும்.
ஒவ்வொரு நாள் இரவும் ஒரு துண்டு கத்திரிகாயைப் பயன்படுத்தவும்.
ஒவ்வொரு முறையும் புதிதாக நறுக்கிய கத்திரிகாயைப் பயன்படுத்துவது சிறந்தது, இப்படி செய்வதால் அடுத்த இரண்டு வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

உடலில் அசிங்கமாக காணப்படும் மருவை போக்கனுமா?
Reviewed by Author
on
July 14, 2019
Rating:
No comments:
Post a Comment