இளைஞரின் வீட்டை சுற்றிலும் புதைக்கப்பட்டிருந்த பெண்கள், சிறுமிகளின் சடலங்கள் -
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் இளம்பெண் ஒருவர் மாயமாகியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது ஜூலியஸ் மன்டாவே (25) என்பவரின் வீட்டிற்கு அவர் கடைசியாக சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக பொலிஸார் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் ஜூலியஸ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

3 வாரங்களுக்கு பிறகு அவருடைய தாயே பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேஸ்புக் மூலம் பழக்கமான டோக்கி தலாகா (24) என்கிற பெண் தன்னுடைய வீட்டிற்கு வந்த போது பாலியல் உறவு கொண்டுள்ளார். அதற்கு அந்த பெண் பணம் கேட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது.

உடனே அந்த பெண் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், ஜூலியஸை கொலை செய்து வீட்டின் அருகே புதைத்துள்ளார்.
இதேபோல பனேலே கோசா (15) நோக்ஸோலோ எம்.டிலுலி (19) ஃபெலிசியா ஷபங்கு (17) மற்றும் நொம்தாண்டசோ எம்டூலி (19) என மேலும் 4 பேரை கொலை செய்து புதைத்திருப்பதும் தெரியவந்தது.

உடனே வீட்டை சுற்றிலும் சோதனை மேற்கொண்ட பொலிஸார், 5 பேரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜூலியஸை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அறிந்து திரண்ட பொதுமக்கள் வீட்டிற்கு தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் இந்த செயலால் தடயங்கள் அழிந்திருப்பதாக கூறி, பொலிஸார் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இளைஞரின் வீட்டை சுற்றிலும் புதைக்கப்பட்டிருந்த பெண்கள், சிறுமிகளின் சடலங்கள் -
Reviewed by Author
on
July 16, 2019
Rating:
No comments:
Post a Comment