வெளிநாட்டில் தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள தெற்கு அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் விஜய் பிரவின் மகராஜன். இவர் சிங்கப்பூரில் உள்ள ‘National University of Singapore' பல்கலைக்கழகத்தில் ‘தானியங்கி இயந்திரங்கள்’ குறித்து உரையாற்றி விருது பெற்றார்.
அதன் பின்னர், ஜேர்மனிக்கு மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க சென்றார். படிப்பை முடித்ததும் Data Analytics பிரிவில் பணிக்கு சேர்ந்தார். தற்போது ஜேர்மனியில் சிறந்த Data Analytics நிபுணராக விளங்குகிறார்.
28 வயதில் இந்த சாதனையை செய்திருக்கும் விஜய் பிரவின் மகராஜன், Whitehall Media என்ற அமைப்பு 5வது முறையாக நடத்திய Steigenberger Frankfurt, Data Analytics Conferenceயில் கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் Deutsche Telekom, E.ON ஆகிய ஜேர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ, சி.ஓ.ஓக்கள் கலந்துகொண்ட விஜய் பிரவின் மிகவும் இளம் வயதில் உரையாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, அவர் தனது சாதனை குறித்து கூறுகையில், ‘மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க ஜேர்மனி வந்தேன். படிப்பு முடிந்தவுடன் Data Analytics பிரிவில் வேலை கிடைத்தது. இந்த துறை எனக்கு பிடித்துப் போகவே அதில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
பின்னர், Siemens நிறுவனத்தின் மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டில் இணைந்தேன். வேலையில் சேர்ந்த 9வது மாதத்திலேயே அந்த ப்ராஜெக்ட்டை சிறப்பாக செய்து முடித்ததால், அதிக பட்சம் 3 சதவிதம் சம்பள உயர்வு கொடுக்கும் இடத்தில், எனக்கு 8.4 சதவிதம் கொடுத்து பதவி உயர்வும் தந்தார்கள்.
Whitehall Media எங்கள் Siemens நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, Data Analytics-யில் என் நுண்ணாய்வுத் திறமையைப் பற்றி கூறியிருக்கிறார்கள். உடனே, எனக்கு மெயில் அனுப்பி சில விடயங்களை கேட்டறிந்தனர்.
பின், ஒரு பக்க அளவில் Data Analytics பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்ப கூறியிருந்தனர். சில வாரங்கள் கழித்து, 3வதாக வீடியோ கான்பெரன்ஸில் என்னிடம் சில நுணுக்கமான விடயங்களை விளக்கக் கூறி கேட்டனர்’ என தெரிவித்துள்ளார்.
அதன் பிறகே Frankfurt நகரில் நடந்த Whitehall Media அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
வெளிநாட்டில் தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!
Reviewed by Author
on
July 26, 2019
Rating:
No comments:
Post a Comment