தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாணவர்களை இணைப்பதற்கான பயிற்சி கருத்தரங்கு -
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்னோடி பயிற்சி கருத்தரங்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் வீ.கனகசுந்தரமின் நெறியாள்கையில் கீழ் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் அனைத்து பயிற்சி நெறிகளும் இலவசமாக கற்பிக்கப்படுவதுடன், தூர தேசங்களிலிருந்து கற்கை நெறியினை தொடருகின்ற மாணவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பயிற்சி கருத்தரங்கில் 2019ம் ஆண்டு 2ம் பிரிவுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் , கணினி வன்பொருள் திருத்துநர் , கணினி பட வரைஞர் , தையல் , மின்னியலாளர் , அழகுக் கலை மற்றும் சிகையலங்காரம் , அலுமினியம் பொருத்துநர் போன்ற பல்வேறு பயிற்சி நெறிகளில் ( NVQ-3 , NVQ-4 ) பயிலவுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாணவர்களை இணைப்பதற்கான பயிற்சி கருத்தரங்கு -
Reviewed by Author
on
July 04, 2019
Rating:

No comments:
Post a Comment