வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு!! -
வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் மற்றும் தென்னை சார் கைத்தொழில்களை செய்பவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள சமுர்த்தி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது தென்னை பயிர் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் பெ.உதயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்னை சார் உற்பத்திகளை செய்யும் விவசாயிகள் மற்றும் தென்னை சார் பொருட்களில் கைத்தொழில்களை செய்ய எதிர்பார்த்திருக்கும் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட 'கற்பக' சங்கங்களின் உறுப்பினர்களான 200 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தென்னை சார் சிறு கைத்தொழில்களை உற்பத்தி செய்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கான இயந்திரங்கள், உபகரணங்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு!! -
Reviewed by Author
on
July 26, 2019
Rating:

No comments:
Post a Comment