ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டுவது எப்படி? -
எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான், உடல் எடை அதிகமாகுவதுண்டு.
அந்தவகையில் அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

- வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
- முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.
- வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.
- தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.
- தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பிரட் வாங்கும் போது, கோதுமை பிரட்டை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.
- காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.
- பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
- வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
- கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டுவது எப்படி? -
Reviewed by Author
on
July 01, 2019
Rating:
No comments:
Post a Comment