மன்னார் மடு தேவலய வருடாந்த திருவிழா தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்
எதிர்வரும் ஆவணி மடு பெருவிழாவுக்கு பெருந்தொகையான பக்தர்கள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் நாட்டின் நிலமை இன்னும் வழமைக்கு திரும்பாததால் பக்தர்களின் நலன் கருதி பாதுகாப்பை
பலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
-எதிர்வரும் ஆவணி மாதம் 15ந் திகதி மன்னார் மறைமாவட்டத்திலுள்ள மடு
அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு இதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
நோக்குடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இவ் கலந்துரையாடலில் பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், வீதி
ஒழுங்குகள், மின்சாரம், குடிநீர், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் போன்ற
அத்தியாவசிய தேவைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.
இவ் கூட்டத்தில் மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை, மடு பரிபாலகர் அருட்பணி எஸ்.ஐ.பெப்பி சோசை, கத்தோலிக்க விவகார அமைச்சின் அதிகாரி, முப்படை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ் கூட்டத்தில் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ அண்டகை தொடர்ந்து இங்கு தெரிவிக்கையில்
எதிர்வரும் 15ந் திகதி (15.08.2019) மன்னார் மறைமாவட்டத்திலுள்ள மடு ஆலய
பெருவிழாவை மிக சிறப்பாக கொண்டாடுவதற்காக அரசு, அரசு சார்பற்ற
திணைக்களங்களைச் சார்ந்தவர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.
தற்பொழுது நாட்டின் நிலை இன்னும் சகஐ நிலைக்கு திரும்பவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து அச்ச நிலையிலே இருந்து வருகின்றனர்.
இருந்தபொழுதும் இவ் விழாவுக்கு வழமையாக பெருந் தொகையான பக்தர்கள் வருதை தருவதுபோல இம்முறையும் இவ்வாறான பக்தர்கள் தொகை வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
இதனால் இன்றைய சூழ்நிலையில் இங்கு பாதுகாப்பை பலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதுடன் இங்கு பெருவிழாவுக்கு வந்து செல்லும் பக்தர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கின்றது.
ஆகவே மாவட்ட, பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்கள் வழமைபோன்று மடு பெருவிழாக் காலங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை திணைக்கள அதிகாரிகளான நீங்கள் சிறந்த முறையில் செய்து தருவீர்கள் என நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம். எனவும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
July 31, 2019
Rating:

No comments:
Post a Comment