வடக்கு ஆளுநரைச் சந்தித்த ஜேர்மன் தூதுவர்! பேசப்பட்ட முக்கிய விடயங்கள்.. -
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோன் ரொட்டிற்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று (04) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இச் சந்திப்பின் போது ஜேர்மன் தூதுவரோடு பேசிய ஆளுநர், 29 வருடங்களுக்கு பின்னர் தமது இடத்தினை பார்வையிட காங்கேசன்துறை , கீரிமலை மக்கள் இன்று விஜயம் செய்ததனை நினைவுகூர்ந்த ஆளுநர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொதுமக்களுடைய காணிகளை அவர்களிடமே விடுவிக்கும் செயற்பாடுகளை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாக விளக்கியுள்ளார்.
வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் அதற்காக ஆளுநர் என்ற வகையில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பில் தெரிவித்த ஆளுநர், ஜேர்மன் அரசாங்கத்தினால் வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவமுடியுமான வழிகளில் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, வடமாகாணம் எதிர்காலத்தில் முகம்கொடுக்கவுள்ள நீர்ப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐந்து திட்டங்கள் குறித்து விளக்கமளித்த ஆளுநர் அதன் முதற்திட்டமான வடமராட்சி களப்பு திட்டம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
மேலும் வடமாகாணத்தின் பாதுகாப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு ஆளுநரைச் சந்தித்த ஜேர்மன் தூதுவர்! பேசப்பட்ட முக்கிய விடயங்கள்.. -
Reviewed by Author
on
July 05, 2019
Rating:

No comments:
Post a Comment