தமிழர்களை அடிமைகளாக சித்தரித்த சிங்களத் திரைப்படங்கள்! விமர்சிக்கும் மகிந்த விசுவாசிகள் -
இலங்கை தமிழர்களை சிங்கள மக்களுக்கு அடிமைகளாக மாற்றியது சிங்களத் திரைப்படங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கிடையில் நட்பு ரீதியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
1970 தொடக்கம் 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெளியான சில் திரைப்படங்களை பார்ப்போமானால் இது தெளிவாக தெரியும்.
கூலித் தொழிலாளிகள், சமையல்காரர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதணி சுத்திகரிப்பவர்கள் போன்ற காட்சிகளுக்கு தமிழர்கள் அல்லது தமிழ் பெயர்கள் பயன்படுத்தப்பட்ட சிங்களத் திரைப்படங்கள் அப்போது வெளியிடப்பட்டது.
இவ்வாறான காட்சிகளில் தமிழர்கள் அடிமைகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான காட்சிகளின் காரணமாகவே தமிழர்களை இன்றும் சிங்களவர்கள் அடிமைகளாகவே எண்ணுகின்றனர்.
தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கே, தமிழர்கள் இன்றும் வாக்களித்து வருகின்றனர்.
தமிழர்களுக்கு துரோகம் விளைவித்த ஐக்கிய தேசியக் கட்சியை தமிழர்கள் ஏற்றுக்கொள்கின்ற போதிலும், தமிழர்களுக்கு நன்மையை செய்த தமது தலைமைத்துவத்தை தமிழர்கள் துரோகிகளாகவே கருதுகின்றனர்.
இருப்பினும் தமிழர்கள் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஸ பல தவறுகளை இழைத்ததாக குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால் இறுதி யுத்தத்தின் போது ஆணையை பிறப்பித்த அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை அடிமைகளாக சித்தரித்த சிங்களத் திரைப்படங்கள்! விமர்சிக்கும் மகிந்த விசுவாசிகள் -
Reviewed by Author
on
July 27, 2019
Rating:

No comments:
Post a Comment